ELLA PUGALUM ERAIVANUKE

Friday, March 6, 2015

இந்திய ஆண்களின் ஆரோக்கிய பழக்க வழக்கங்கள்

நடைப்பயிற்சி



நடைப்பயிற்சி சாப்பிட்டு முடித்த பின், எப்போதும் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் இந்திய ஆண்கள். இது அவர்களது செரிமானத்தை சரி செய்கிறது.

ஜீரணம் சரியாக




மதியம் அதிகமாக உணவு சாப்பிட்டால் அதை சரி செய்ய சீரகத்தை சாப்பிடுவதை பழக்கமாக வைத்துள்ளனர் இந்திய ஆண்கள். இது அவர்களுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.

உணவுக்கட்டுப்பாடு






பெண்கள் உணவுக் கட்டுப்பாட்டை எழுதி வைத்து பின் தொடர்வார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை, அவர்கள் தங்களுக்கு எவ்வளவு உணவு தேவைப்படுகிறதோ அவ்வளவு தான் சாப்பிடுவார்கள். சரியான நேரத்தில், சரியான அளவு உணவை உட்கொள்வதை இந்திய ஆண்கள் பழக்கமாய் வைத்துள்ளனர்.

தண்ணீர் பருகுவது




இந்திய ஆண்களிடம் இருக்கும் பொதுவான ஆரோக்கிய பழக்கமாக கருதுவது, நிறைய தண்ணீர் பருகுவது.தண்ணீர் நிறைய பருகுவதனால், உடல் சுத்தமாகிறது
டீ



ஆண்கள் காபி பருகுவதை விட அதிகம் டீ குடிக்கவே விரும்புவார்கள். காபீயை விட டீ தான் நமது உடல்நலத்திற்கு நல்லது. இதனால் இதய பிரச்சனைகள் வராது.
உடற்பயிற்சி



இந்திய ஆண்கள் தினந்தோறும் ஜிம்மிற்கு செல்வதை பழக்கமாக வைத்துள்ளனர். இது அவர்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும். உடல் திறன் அதிகப்படுத்தவும் உதவுகிறது.


விளையாட்டு


இளம் வயதில் மட்டும் இல்லாது, இந்திய ஆண்கள் அவர்களது அனைத்து வயதிலும் விளையாட்டில் ஆர்வமாய் இருப்பார்கள். ஏதாவது ஒரு விளையாட்டை நாம் எப்போதும் விளையாடுவது அவசியம். ஏனெனில் அப்போதுதான் நமது உடலில் இருக்கும் தசைகள் அனைத்தும் செயல்பட்டு. உடல்திறன் வலிமை அடையும்.


சீரியல் பார்ப்பது இல்லை





அழுகை மட்டுமே பரிசாய் தரும். இந்திய சீரியல்களை இந்திய ஆண்கள் பார்ப்பதில்லை. இந்திய மக்களின் உடல்நலனை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது டி.வி. சீரியல்கள் தான்

ஜங் ஃபுட்




இந்திய ஆண்கள் ஜங் ஃபுட் சாப்பிடுவதை அதிகமாக விரும்புவதில்லை. பெரும்பாலும் தங்களது வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவே விரும்புகின்றனர்

வீட்டு வேலைகள் செய்வது




வீட்டில் தினமும் பெண்கள் வேலை செய்தாலும். பெரும்பாலான கடின வேலைகளை ஆண்கள் தான் செய்கின்றனர். இது அவர்களது உடல் திறனை அதிகரிக்க உதவுகிறது


No comments:

Post a Comment