ELLA PUGALUM ERAIVANUKE

Wednesday, March 11, 2015

தம்பதியினரை இணைக்க உதவும் சில பல விஷயங்கள்!!!

மாலை நேர நடைப்பயணம்



உங்கள் துணையோடு கொஞ்ச நேரம் எழில்மிகு மாலை நேரத்தில் கைக்கோர்த்து சிறிது தூரம் நடைப்பயணம் மேற்கொள்ளுங்கள். குறைந்தது பக்கத்தில் இருக்கும் பூங்கா அல்லது கோவில்களுக்கு கூட போய் வரலாம். அந்த நடைப்பயணம் உங்கள் உறவை இணைக்கும் பாலமாய் இருக்கும். அன்பின் வெளிப்பாட்டை அதிகப்படுத்தும். பெண்களுக்கு மிகவும் விரும்புவது அவர்களது துணையோடு கைக்கோர்த்து நடப்பது.

இந்த கேள்வியை கேட்க மறக்க வேண்டாம்



நீ எப்படி இருக்கிறாய், இன்றைய நாள் எப்படி இருந்தது... இந்த கேள்விகளை கேட்க ஒருநாளும் மறக்க வேண்டாம். நீங்கள் அவர்களின் மேல் அக்கறையாக இருக்கிறீர்கள் என அவர்கள் உணர்ந்தாலே போதும். உறவு வலிமையடைந்துவிடும்.

சிரித்து பேசுங்கள்



காதலிக்கும் போதும், திருமணத்தின் புதிதிலும், ஆண்கள் அவர்களது துணையை வயிறு குலுங்க சிரிக்க வைத்து பேசி ஆசையை வளர்த்து விடுவார்கள். நாட்கள் கழிந்ததும் அந்த பேச்சும் கழிந்துவிடும். இது தான் தவறு. குறைந்தது வாரம் ஓரிரு முறையாவது உங்கள் இருவருக்குள் மனம்விட்டு சிரித்து பேச வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி, பழைய நினைவுகளை அசைப்போட்டு பேச ஆரம்பித்தாலே சிரிப்பு தன்னை போல வந்துவிடும்.

கோபத்தில் தவறான வார்த்தைகளை தவிர்க்கவும்



ஆண்களுக்கு கோபம் வந்துவிட்டால் அவர்கள் என்ன பேசுகின்றனர் என்றே தெரியாது. மனதில் பட்டதை மட்டுமின்றி தவறான வார்த்தைகளையும் உபயோகப்படுத்துவார்கள். இந்த தவறை நீங்கள் தவிர்த்தாலே சண்டை எளிதாக முடிந்துவிடும். தேவையற்ற மன வேதனைகள் ஏற்படாது.

வாக்குவாதம் வேண்டாம்


சண்டகளின்றி வாழ்க்கை இனிக்காது. அதே சமயம் விட்டுக்கொடுத்து போவது அவசியம். ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்யாது யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து பேசுவது அவசியம்.

கொண்டாடுங்கள்



உங்கள் துணை எதாவது சின்ன சின்ன விஷயம் செய்தாலும் அவர்களை பாராட்டுங்கள், தூக்கி வைத்து கொண்டாடுங்கள். இந்த காரியம் தான் ஒரு உறவு வளமடைய முக்கியமாக தேவை. இந்த உலகிலேயே நம்மை தவிர வேறு யாரும் அவர்களை அதிகமாக புரிந்து வைத்திருக்க முடியாது. அதனால், அவர்களை நூறு சதவீதம் பாராட்டுவதற்கும், கொண்டாடுவதற்கும் நமக்கு தான் உரிமை உண்டு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். பெண்கள் இதை அதிகமாக எதிர்பார்ப்பார்கள். வெறுமெனப் போட்டதை சாப்பிடாது, அது நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். மறுநாள் மேலும் ருசியான உணவு உங்களுக்கு பரிமாறப்படும். அதில் அவர்களது காதல் இரு தேக்கரண்டி அதிகமாக இருக்கும்.

உடற்பயிற்சி



நீங்கள் உங்கள் துணையோடு உடற்பயிற்சி செய்யுங்கள், அதற்காக கிலோ கணக்கில் எடை எல்லாம் தூக்க சொல்ல வேண்டாம். சாதரணமாக நடைப்பயிற்சி, யோகா, காலை வேளையில் நீங்கள் இருவரும் ஒன்றாக உங்களது நாளை ஆரம்பித்து பாருங்கள் அதன் இனிமையே தனி. இப்படியான சிறு சிறு விஷயங்கள் தான் ஒரு உறவை வலிமைப்படுத்துகிறது.

பேசுவதை விட, கேளுங்கள்



நீங்கள் பேசவேண்டும் என்பதை விட உங்கள் துணை என்ன பேசுகிறார் என காதுக்கொடுத்து கவனியிங்கள். அதன் மூலம் அவர்கள் மனதில் இருந்து வெளிப்படும் உணர்வுகளை புரிந்துக்கொள்ள பழகுங்கள். இது உங்களது உறவை மேம்படுத்த உதவும்

நண்பர்களை வெறுக்காதீர்கள்



ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும். அவர்களது நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் ஏதோ கடன் காரன் வருவதை போல பார்ப்பது, நடந்துக்கொள்வது, அவர்கள் சென்ற பிறகு இதையெல்லாம் வெளியில் வைத்துக்கொள்ள கூடாது என பேசுவதை தவிர்த்திடுங்கள். கண்டிப்பாக ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களது நண்பர்களை வெறுப்பதை விரும்பமாட்டார்கள். இது உலக அளவில் அனைவருக்கும் பொருந்தும் ஒரு விஷயமாகும்.

படுக்கையில் அலாதி பிரியம்



தம்பதியினருக்கு இடையே என்ன சண்டையாக இருந்தாலும் அதை தீர்த்து வைக்கும் ஆலமரமாய் இருப்பது படுக்கையறை தான். எல்லா பிரச்சனைகளும் தூசியென தட்டி எறிந்துவிட்டு இருவரையும் இணைக்கும் இடம் இது. உங்கள் துணையை உடலளவில் மட்டும் இல்லாது மனதளவிலும் நீங்கள் அதிகம் சந்தோசப்படுத்த வேண்டிய இடம் இது. இது சரியாக நடந்துவிட்டால் போதும். உங்கள் இல்லறம் என்றுமே நல்லறமாக தான் இருக்கும்.



No comments:

Post a Comment