ELLA PUGALUM ERAIVANUKE

Saturday, March 14, 2015

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்




Inline images 1


 1. ஏதாவது விசேஷத்திற்கு சாப்பிட போகும்முன், ஒரு ஸ்பூன் தேனுடன்,ஒருசிறிய மேசைகரண்டி பட்டைபொடி சேர்த்து நன்றாக குழைத்து சாப்பிட்டால், சாப்பிட்டவுடன் அஜீரண கோளாறு எதுவும் ஏற்படாது.

2. படிக்கிற மாணவர், மாணவிகள், மற்றும் ஆசிரியர் வேல பார்ப்பவர்களுக்கு தொண்டைப் புண் அடிக்கடி ஏற்படும். அதற்கு அவர்கள் ஒரு டம்ளர் வெந்நீரில், ஒருசிட்டிகை மஞ்சள், ஒருஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கி, அரைமணிக்கு ஒருதடவை குடித்தால் தொண்டைப் புண் சரியாகிவிடும்.

3. சளி அதிகமாக இருந்தால் பத்து துளசி இலைகளை தொடர்ந்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, சளி அனைத்தும் வந்துவிடும்.

4. தொண்டை வேக்காளாம் வந்து வயிறும் புண்ணாகி, காதில் உள்ளே அரிக்கும். அதற்கு ஒரு சிறிய குழிக்கரண்டி பச்சரிசாதம் சூடாக எடுக்கவும். அதனுடன் அதற்குத் தேவையான சுடுகிற பாலையும் சேர்க்கவும். ஆறியவுடன் ஒரு துளி தயிர் சேர்க்கவும். மறுநாள் காலை பல்விளக்கியவுடன் இந்த சாதக்கலவையை சாப்பிடவும். இந்த மாதிரி தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டால் வயிற்று,தொண்டை வேக்காளம் இல்லாமல் போய்விடும்.

5. வயிற்று வேக்காளத்திற்கு மணத்தக்காளி கீரையைக் கூட்டு வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வேக்காளம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.



6. குழம்போ, ரசமோ செய்யும் பொழுது உப்பு போட்டு இருக்கிறோமா, இல்லையா என்பதை கண்டுபிடிக்க ஒரு சிறிய வழி. உப்பு போடவில்லை என்றால் ஒரத்தில் நுரையுடன் கொதித்துக் கொண்டு இருக்கும். உப்பு போட்டு இருந்தால் நடுவில் நுரையுடன் கொதிக்கும்.

7. குழந்தைகள் கறிவேப்பில்லை சாப்பிட மாட்டார்கள். எனவே சமையலில் தாளிக்கும் போது, பதினைந்து இலைகளைப் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்தால் சத்து சேரும்.

8. பொரித்த கூட்டிற்கு தேங்காய் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். காய்கறி வேகும் பொழுதே சிறிது சீரகம் சேர்க்கவும். அனைத்தும் வெந்தவுடன், அரை டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் கடலை மாவை நன்றாகக் கரைத்து, கூட்டில் சேர்க்கவும். தேங்காய் போட்ட ருசி கிடைக்கும்.

9. குழம்பிற்கு பழைய புளியாக இருந்தால், கரைத்த புளியுடன் ஒரு சிறியகட்டி வெல்லம் சேர்த்தால், நல்ல ருசியாக இருக்கும்.

10. கோதுமை தோசைக்கு கரைக்கும் போது, சில சமயம் கட்டிகட்டியாக இருக்கும். அவற்றை மிக்ஸியில் ஒரு முறை நன்றாக ஓட்டி எடுத்தால், மிகவும் மிருதுவாக தோசை வரும்.

No comments:

Post a Comment